Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய கடலோர காவல் படைக்கு கூடுதல் பலம்: அதிநவீன ஹெலிகாப்டர்கள் சேர்ப்பு!

இந்திய கடலோர காவல் படைக்கு கூடுதல் பலம்: அதிநவீன ஹெலிகாப்டர்கள் சேர்ப்பு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Jun 2021 5:44 PM IST

இந்தியாவின் கப்பற்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக, உள்நாட்டிலேயே முப்படைக்கும் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் பணியில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஆத்ம நிர்பார் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தற்பொழுது கப்பல் படைக்கு உதவியாக, மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில் கடலோர காவல் படையில் 3 ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டது. மூன்று ஹெலிகாப்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு கடலில் மீட்பு பணிக்கு உதவியாக இருக்கும் தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளது.


இந்திய கடலோர காவல் படைக்கு 16 Mk-3 இலகு ரக ஹெலிகாப்டர்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் முதல் 3 ஹெலிகாப்டர்கள் நேற்றைய தினம் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டன. ராணுவ செயலாளர் அஜய்குமார் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இந்த ஹெலிகாப்டர்களை படையில் இணைத்து வைத்தார். இணையவழி காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த உயர்தர இலகு ரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோரக் காவல்படையின் அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நவீன ரகத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் கடலோர காவல் படைக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து வரும் ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் 16 ஹெலிகாப்டர்களும் கடலோர காவல்படையில் மேலும் இணைக்கப்படும் எனவும், இவை அனைத்தும் புவனேஸ்வர், போர்பந்தர், கொச்சி, சென்னை ஆகிய தளங்களில் சேர்க்கப்படும் எனவும் ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News