Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர்ந்து அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை - சுகாதாரத் துறையின் அதிர்ச்சி தகவல்!

தொடர்ந்து அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை - சுகாதாரத் துறையின் அதிர்ச்சி தகவல்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Jun 2021 5:46 PM IST

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு, அதன்பிறகு தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது. இதனால்தான், மக்கள் அதற்கும் உரிய சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கொரோனா சிகிச்சையின் போது கொடுக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது, மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு சுமார் 49 பேர் உயிரிழந்து உள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


இதுவரை இந்த தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு உயிரிழப்பிற்கு வாய்ப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை கூறுகின்றது நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் காணப்படுகிறது. இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 49 பேர் உயிரிழந்து உள்ளனர் என மாவட்ட சுகாதார துறையின் தகவல் மேலாளர் அபூர்வா திவாரி தெரிவித்து உள்ளார். இந்தூரில் மொத்தம் 764 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 149 நோயாளிகள் சிகிச்சையில் குணமடைந்து சென்றுள்ளனர். கரும்பூஞ்சை பாதிப்பினால் 49 பேர் நோய் பாதிப்பினால் உயிரிழந்து விட்டனர் என கூறியுள்ளார். இதனால், 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News