Kathir News
Begin typing your search above and press return to search.

குறைந்த தீவிரவாத அச்சுறுத்தல்கள் - அமைதி மற்றும் வளர்ச்சி பாதையில் ஜம்மு காஷ்மீர்!

குறைந்த தீவிரவாத அச்சுறுத்தல்கள் - அமைதி மற்றும் வளர்ச்சி பாதையில் ஜம்மு காஷ்மீர்!

ParthasarathyBy : Parthasarathy

  |  14 Jun 2021 8:28 AM GMT

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை (Article 370) மத்திய பா.ஜ.க அரசு 2019-ஆம் ஆண்டு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இது குறித்து நேற்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில் "கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும் இடதுசாரி தீவிரவாதிகள் மற்றும் சர்வதேச பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் குறைந்துள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.


நேற்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கட்டப்பட உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலின் பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தானம் அர்ச்சகர்கள் மந்திரங்கள் கூறி பூமி பூஜையை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, Dr. ஜிதேந்திரா சிங் மற்றும் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி " பா.ஜ.க அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின், தற்போது ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் குறைந்துள்ளது, இடதுசாரி தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் குறைந்து அமைதி நிலவி இருக்கிறது. தற்போது ஜம்மு-காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக பயங்கரவாதத் தாக்குதல், பொருளாதார வளர்ச்சியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மாநிலம் ஜம்மு காஷ்மீர். இந்த பனிமலை பிரதேசத்தை மற்ற மாநிலங்கள்போல் வளமுள்ள பொருளாதார பிரதேசமாக மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும்." என்று அவர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News