Kathir News
Begin typing your search above and press return to search.

கிறுஸ்தவராக நடித்து இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த ஷமீர் - குஜராத் கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் கைது!

கிறுஸ்தவராக நடித்து இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த ஷமீர் -  குஜராத் கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் கைது!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  19 Jun 2021 10:48 AM GMT

குஜராத்தில் கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டம் 2021-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் குஜராத்தில் முதல் வழக்கு பதிவாகி உள்ளது. இந்த வழக்கில் சாம் மார்ட்டின் என்ற போலி பெயர் கொண்டு பெண்ணை ஏமாற்றி முஸ்லீம் மதத்திற்கு மாறும்படி காட்டாயபடுத்திய ஷமீரை காவல் துறையினர் கைது செய்தனர்.


குஜராத்தில் வதோதராவைச் சேர்ந்தவர் ஷமீர் குரேஷி . இவர் 2019-ஆம் ஆண்டு, சாம் மார்ட்டின் என்ற போலி பெயர் மற்றும் அடையாளத்துடன் சமூக வலைதளம் வாயிலாக கிறிஸ்தவ இளம் பெண்ணுடன் பழகி உள்ளார். பின் காதல் என்ற வலையின் மூலமாக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்பு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லாவிடில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் கூறி அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். இந்த மிரட்டலுக்கு பயந்த அந்த பெண் திருமணத்திற்கு சம்மதித்தார்.


திருமணம் முஸ்லிம் முறைப்படி நடந்தபோது தான், ஷமீர் என்ற பெயர் கொண்ட அந்த நபர் சாம் மார்ட்டின் என்ற போலி பெயர் கொண்டு தன்னை ஏமாற்றியது அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது. பின் அந்த பெண்ணை முஸ்லீம் மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தி உள்ளார், அதுமட்டுமின்றி அந்த பெண்ணை மத ரீதியாக துஷ்ப்ரயோகம் செய்துள்ளார். இதையடுத்து, சமீபத்தில் அமல் படுத்தப்பட்ட கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் ஷமீர் மீது அந்த பெண் வழக்கு பதிவு செய்தார். இதனை அடுத்து காவல் துறையினர் ஷமீர் குரேஷியை கைது செய்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News