Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Jun 2021 6:06 PM IST

உலகமெங்கும் தன்னுடைய கோர முகத்தைக் காட்டி பல்வேறு வகையாக உருமாறி உருமாறி தினசரி பாதிப்புகளை அதிகரித்துக்கொண்டே கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் தற்போது பிரேசில், இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகள் இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் தற்பொழுது பரவிவரும் கொரோனாவின் இரண்டாவது அலை குறைந்து கொண்டுவருவதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


அதாவது தற்பொழுது தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால், கொரோனாவின் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை, 74 நாட்களுக்கு பின் குறைவாக உள்ளது. தற்போது, குணமடைபவர்களின் விகிதம் 96.16 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மேலும் இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் இந்த தொற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதாக அவர்கள் கூறியுள்ளார்கள். இருந்தாலும் மக்கள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தகுந்த பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News