Kathir News
Begin typing your search above and press return to search.

இன்னும் ஒரு வருடம் நீடிக்கும் கொரோனா தாக்கம் - விஞ்ஞானிகள் கருத்து!

இன்னும் ஒரு வருடம் நீடிக்கும் கொரோனா தாக்கம் - விஞ்ஞானிகள் கருத்து!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Jun 2021 12:46 PM GMT

இந்தியாவில் குறைத்து வரும் தாக்கங்களுக்கு இடையில், இந்தப் பெரும் தோற்று எப்பொழுது வரை நீடிக்கும் என்று கேள்வியும் மக்கள் மனதில் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. மேலும் மக்கள் அனைவரும் எப்பொழுது சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்பது போன்ற பல ஆசைகளுடன், எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ சுகாதார நிபுணர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை கூறியுள்ளார்கள்.


பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், இந்தியாவில் கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும்? என்பது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள சிறந்த சுகாதார நிபுணர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் என 40 பேரிடம் கருத்து கேட்டது. அதன்படி, இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் வீசக்கூடும் என பெரும்பாலானோர் கூறியுள்ளனர். சிலர் ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் வரக்கூடும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலை மத்திய, மாநில அரசுகளால் திறம்பட கையாளப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துவிடும் என்பதால் இயற்கையாகவே பொதுமக்களிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுவிடும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வருவதில் விஞ்ஞானிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். 40 பேரில் 14 பேர், ஆபத்து பொதுவானதுதான் என கூறியுள்ளனர். மேலும் இந்த கொரோனா அச்சுறுத்தல் குறைந்தது ஓராண்டு நீடிக்கும் என 30 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News