Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா இரண்டாவது அலையில் பெரும் உயிரிழப்பை சந்தித்த பீகார் - அதிர்ச்சித் ரிப்போர்ட்!

கொரோனா இரண்டாவது அலையில் பெரும் உயிரிழப்பை சந்தித்த பீகார் - அதிர்ச்சித் ரிப்போர்ட்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Jun 2021 6:22 PM IST

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பாதிப்புக்கள் குறைந்திருந்தாலும் தற்பொழுது கொரோனா பாதிப்பு தீவிரமாக பீஹாரில் பரவியுள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரண்டாவது அலை காரணமாக பீகாரில் மட்டும் சுமார் 75 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் இழந்து உள்ளார்கள் என்னும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. பீஹாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. கொரோனா இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி இறுதியிலிருந்து தீவிரமாக பரவத் துவங்கியது.


பீஹாரில் கடந்த ஜனவரி-மே மாதம் வரை கொரோனாவுக்கு 7,717 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பீஹாரில் 2019 ம் ஆண்டு ஜனவரி–மே மாதங்களில் 1.3 லட்சம் பேர் இறந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.1 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எதனால் இறந்தனர். அதனால் இவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கலாமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதிலும் கடந்த மாதம் மட்டும் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அதிகமான எண்ணிக்கையிலான இழப்புகள் சந்தித்த மாநிலங்களின் பட்டியலின்படி, பீகார் தற்போது முதலிடத்தில் உள்ளது. இறந்த அனைத்து நபர்களும் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தார்களா? அல்லது வேறு காரணங்களுக்காக இறந்தார்களா? என்பது குறித்த வினாக்களுக்கு விரைவில் விடை கிடைக்கும் என்றும் மாநில அரசின் சார்பாக கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News