சபர்மதி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் : தண்ணீர் மூலமாக பரவுமா?

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், குஜராத்தின் சபர்மதி ஆற்றில் வீரியமிக்க கொரோனா வைரஸ் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளதாக IIT காந்திநகர் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது கண்டுபிடித்து உள்ளார்கள். இது மிகவும் ஆபத்தான அறிகுறிகள் ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்சமயம், சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சபர்மதி மட்டுமல்லாமல் கங்காரியா, சந்தோலா ஏரியின் நீர் மாதிரிகளை சோதனை செய்ததிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சபர்மதி ஆற்றில் இருந்து 694 க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும் 549 மாதிரிகள் சந்தோலா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது மற்றும் 402 காங்க்ரியா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டவை தண்ணீரில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்ற ஆராய்ச்சியை, IIT காந்திநகர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.
இந்த மாதிரிகள் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வீரியமிக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது. IIT காந்திநகர் உட்பட இந்தியாவில் 8 நிறுவனங்கள் கூட்டாக ஒன்றிணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இயற்கையான நீரிலும் வைரஸ் உயிர்வாழ முடியும் என்பதை இந்த ஆய்வு தெளிவாகக் காட்டுகிறது. எனவே, நாட்டின் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களை ஆராய வேண்டும், ஏனெனில் வைரஸின் பல தீவிரமான உருமாற்றம் 2வது அலைகளில் காணப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் கொரோனா வைரஸ் காணப்படுகிறதா? என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் இதேபோன்ற சோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளனர்.