பருப்பு விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

By : Muruganandham
பருப்பு விலைகள் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
மக்களுக்கு நியாயமான விலையில் பருப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய, அத்தியாவசியப் பொருட்களை கண்காணிக்கும் நுகர்வோர் விவகாரத்துறை, பருப்புகளின் இருப்பை கண்காணிக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
அதன்படி பருப்பு மில்கள், வியாபாரிகள், இறக்குமதியாளர்கள், தங்களின் இருப்பு விவரத்தை தெரிவிக்க உத்தரவிடும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கடந்த மே 14ம் தேதி கேட்டுக் கொண்டது. ஒவ்வொரு வாரமும் பருப்புகளின் விலையை கண்காணிக்கும்படி மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
பருப்புகளை பதுக்குவதன் மூலம் சந்தையில் விலை ஏற்றப்படுகிறது. இந்த விரும்பத்தகாத நடைமுறையை தடுக்க, நாடு முழுவதும் பருப்புகளின் இருப்பு நிலவரத்தை அவ்வப்போது தெரிவிக்கும் அணுகுமுறை முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருப்புகளின் விலைகள் நிலையாக இருப்பதை உறுதி செய்ய, பருப்பு கொள்முதல் இலக்கு இந்த நிதியாண்டில் பராமரிக்கப்படவுள்ளது. விலை நிலைப்பாடு நிதியின் கீழ் இந்த அளவு 23 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படவுள்ளது. சுண்டல், மைசூர் பருப்பு, பாசி பயிறு ஆகியவற்றின் கொள்முதல் நடைபெற்று வருகிறது.
பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் 14.23 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பருப்புகளின் சில்லரை விற்பனை விலைகளை குறைக்க, மத்திய தொகுப்பிலிருந்து பருப்புகளை வழங்கும் முறை கடந்த 2020-21ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் படி பாசி பயறு, உளுந்து மற்றும் துவரை ஆகியவை மாநிலங்களின் கூட்டுறவு அமைப்புகளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டன.
