இந்தியாவில் உருமாறிய கொரோனா வகை வைரஸ் பாதிப்பு: சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

By : Bharathi Latha
இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புகள் முதல் அலையை விட தற்போது ஏற்பட்டு வருகிற இரண்டாவது அலையில் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேலும் இதன் காரணமாக நாடு முழுவதும் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை சந்தித்தது. இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் கேரளாவில் 3 பேருக்கு உருமாறிய வகையை சேர்ந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா வகை கொரோனா இரண்டாவது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை பரவி வருகிறது என கூறப்படுகிறது. இந்த வகை இந்தியாவில் தற்பொழுது வரை இல்லை என்று நம்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், கேரளாவில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் உள்ள பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன் தகவல் காரணமாக தற்போது ஒரு பரபரப்பான சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் இதுவரை இல்லாத டெல்டா பிளஸ் வைரஸ் காரணமாக, தற்போது அதிகமாக மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். மேலும் இது அதிக எண்ணிக்கையில் மற்றவர்களைக் இடையே பரவக்கூடிய ஒரு வைரஸ் ஆகும் என்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
