இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையில் புதிய உச்சம்!

By : Bharathi Latha
தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது என்பது நம்மை மட்டுமல்ல நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது தற்பொழுது அனைத்து மக்களுக்கும் தெரியவந்து உள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது. இந்தியாவில் இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைவாக இருப்பதன் காரணமாக, மக்கள் யாரும் அடிப்படை வழிமுறைகளை மாற்ற வேண்டாம் இன்றும் சுகாதாரத் துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி கைகளை படுவது போன்று எந்த ஒரு செயல்களையும் மாற்ற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 69 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளார்கள். இந்தியாவில் நேற்று 30.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை இரு மடங்காக இன்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 69.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 கோடியை கடந்துள்ளது.
இந்தியாவில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 69 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சமடைந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. அதிகப்படியான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் மேலும் இந்த நோய் தொற்று பரவாமல் தடுக்க தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
