இந்திய வணிகங்களுக்கு எதிராக சைபர் தாக்குதல்.? பிடிபட்ட சீன உளவாளியின் பகீர் வாக்குமூலம்.!

36 வயதான சீன நாட்டைச் சேர்ந்த ஹான் ஜுன்வே, இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வைத்துள்ள மின்னணு சாதனங்களை வைத்து பார்க்கும்போது, அவர் ஒரு சீன நிறுவனத்தில் பணியாற்றும் உளவாளியாக இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர் தனது பாஸ்போர்ட்டில் பங்களாதேஷ், மற்றும் நேபாளம் நாடுகளுக்கான விசா வைத்திருந்தார். இதில் வங்காளதேசம் மேற்குவங்கம் இடையே எல்லையில் பாதுகாப்பற்ற பகுதி அதிகம் உள்ளது என்பதால், பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் நுழைவது அவருக்கு எளிதாக இருக்கும் என்று ஹான் முடிவு செய்ததாகத் தெரிகிறது.
இந்தியாவிலும் நேபாளத்திலும் நக்சல்களைப் பற்றி அவருக்கு நன்கு தெரிந்துள்ளது மேலும் சந்தேகத்திற்கிடமான சில வங்கி ஆவணங்களும் ஹான் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஹான் கிட்டத்தட்ட 1,300 இந்திய சிம்களை சீனாவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அரசாங்க வலைத்தளங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் இந்திய வணிகங்களுக்கு எதிராக சைபர் தாக்குதலை நடத்துவதற்கான முயற்சியில் அவர் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹான் இதற்கு முன்னர் பல முறை இந்தியா சென்றுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் எடுத்துச் சென்ற பாஸ்போர்ட்டில் பங்களாதேஷின் ஒரே ஒரு முத்திரை மட்டுமே இருந்தது இதனால் அவர் முந்தைய வருகைகளில் வேறு பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.