டெல்டா பிளஸ் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுரை!

By : Bharathi Latha
நாட்டில் கொரோனா முதல் அலையை விட, இரண்டாவது அலையில் அதிக அளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் காணப்பட்டன. மேலும் பல்வேறு வகையில் உருமாறிய வைரஸ்கள் தன்னுடைய ஆதிக்கத்தின் முழுமையாக பல்வேறு மாநிலங்களில் செலுத்திக் கொண்டு வந்திருக்கிறது. மேலும் இந்தியாவில் குறிப்பாக உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் காரணமாக மூன்றாவது அலை ஏற்படுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் வருகின்றது. மேலும் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக தங்களை தற்காத்துக் கொள்ளமுடியும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே டெல்டா பிளஸ் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 8 மாநில செயலர்களுக்கு மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் தற்பொழுது ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், தமிழகம், குஜராத், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் அரியானா ஆகிய 8 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில், டெல்டா பிளஸ் கொரோனாவை கட்டுப்படுத்துதல், தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டு கொண்டுள்ளார்.
எனவே அடையாளம் காணப்பட்ட டெல்டாப் பிளஸ் வைரஸ் எந்த நபரிடம் காணப்பட்டது. அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் விழிப்புடன் கண்காணிக்கும் படியும், மேலும் அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தகவல் கொடுக்கும் படியும் மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
