Kathir News
Begin typing your search above and press return to search.

'பெரும்பான்மை விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர்' : வேளாண் துறை அமைச்சர்!

பெரும்பான்மை விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர் : வேளாண் துறை அமைச்சர்!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  26 Jun 2021 2:00 PM GMT

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதல் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. இது குறித்து வேளாண் துறை அமைச்சர் கூறும்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.


ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய நாட்டின் குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசியர்கள் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது சமூக விரோதிகள் ஊடுருவியதால் இந்த பேரணி பெரும் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் அங்கு திரண்ட மக்கள் காவல் துறையினரை சரமாரியாக தாக்கினர் மேலும் நமது நாட்டின் சிவப்பு கோட்டையில் (Red Fort) காலிஸ்தானின் கொடியை பறக்க விட்டனர். இந்த நிலையில், மீண்டும் விவசாயிகள் சார்பில் வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது.

இது குறித்து வேளாண் துறை அமைச்சர் கூறுகையில், "விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நாட்டில் பெரும்பான்மை பிரிவினர் இந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனினும், இந்த சட்டங்களில் ஏதேனும் ஷரத்துக்கள் ஆட்சேபத்துக்குரிய வகையில் இருந்தால் மத்திய அரசு அதற்கு தீர்வு காண தயாராக உள்ளது. எனவே விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்." என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News