Kathir News
Begin typing your search above and press return to search.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர் உரை!

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர் உரை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Jun 2021 6:23 PM IST

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று பேசிய மன் கி பாத் உரையின்போது, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பற்றியும், அவர்கள் பின்னால் எவ்வளவு கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு அவர்கள் நாட்டுக்காக விளையாடுகிறார்கள் என்பது பற்றியும் அவர் விரிவாகப் பேசினார். மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீர‌ர்களை Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் ஊக்குவிப்போம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


எனவே இதுபற்றி பிரதமர் மேலும் கூறுகையில், நமது நாட்டின் பெரும்பாலான வீரர்கள் சிறிய நகரத்தில் இருந்து வருபவர்கள் தான். அவர்களின் கதைகளை கேட்டால் வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களை சந்தித்து இருப்பார்கள் என்பது நமக்கு புரியும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். திறமை, அர்ப்பணிப்பு, மன உறுதி, நேர்மை எல்லாம் சேரும்போது ஒரு சாம்பியன் உருவாகிறார். டோக்கியோவுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரின் சொந்தப் போராட்டமும், பல வருட உழைப்பும் உள்ளது. அவர்கள் தமக்காக மட்டுமல்ல, நாட்டிற்காகவும் செல்கிறார்கள்.


மேலும் அப்படி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் சில போட்டியாளர்களின் விபரம், மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஜாதவ், இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் பங்கேற்கும் நேகா கோயல், வில்வித்தையில் பங்கேற்கும் தீபிகா. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரும், தங்களது வாழ்க்கையில் கடுமையான போராட்டங்கள் சந்தித்தவர்கள். எனவே அத்தகையவர்களை ஊக்குவிப்பது நம்முடைய கடமையாகும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News