Kathir News
Begin typing your search above and press return to search.

குறைந்த காலகட்டத்தில் அதிக தடுப்பூசி - அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

குறைந்த காலகட்டத்தில் அதிக தடுப்பூசி - அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!
X

ShivaBy : Shiva

  |  28 Jun 2021 8:18 PM IST

குறைந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதிக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவ தொடங்கியவுடன் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டன. இந்தியாவும் உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வந்தது. இதையடுத்து அனைத்து சோதனைகளும் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று (ஜூன் 28) காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 ‛டோஸ்கள்' தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அதிக தடுப்பூசி செலுத்தியதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அமெரிக்காவில் கடந்தாண்டு டிசம்பர் 14 முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் 32.33 கோடி தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டு அதிக தடுப்பூசிகள் செலுத்திய நாடாக இருந்து வந்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனில் 7.67 கோடி தடுப்பூசிகளும், ஜெர்மனியில் 7.14 கோடி தடுப்பூசிகளும், பிரான்ஸில் 5.24 கோடியும், இத்தாலியில் 4.96 கோடியும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த நாடுகளும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசிகள் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் குறைந்த காலத்தில் அதிக தடுப்பூசி செலுத்தி அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் அதிக தடுப்பூசிகள் செலுத்திய நாடுகளில் இந்தியா 2வது இடத்திலும் சீனா முதலிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News