Kathir News
Begin typing your search above and press return to search.

சக கட்சி பெண்ணையே தொடர் பாலியல் வன்கொடுமை செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்!

சக கட்சி பெண்ணையே தொடர் பாலியல் வன்கொடுமை செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  29 Jun 2021 11:55 AM IST

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வடகராவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண் உறுப்பினரை, அக்கட்சியை சேர்ந்த இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அப்பெண்ணுக்கு நேர்ந்த பல கொடுமைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன.

இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்றும் பாராமல் அப்பெண்ணை சீரளித்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பாபுராஜ் என்பவர், அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளார்.

அதன் பின், நடந்த சம்பவத்தை அவருடைய கணவரிடம் தெரிவித்துவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணை தொடர் பாலியல் வன்முறை செய்து வந்துள்ளார். இதையறிந்த அவரது நண்பர் லிஜேஷும் அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாபுராஜ் மற்றும் லிஜிஸ் ஆகியோர், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளனர். இந்தப் பிரச்சனையை மறைக்கவும், சுமுகமாக பேசித் தீர்க்கவும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டபோதும், பாதிக்கப்பட்ட பெண் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் போலீசில் புகார் பதிவு செய்தார்.

அவர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News