Kathir News
Begin typing your search above and press return to search.

'ட்ரோன்கள் மூலம் தாக்குதல், சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்' : ஐ.நா-வில் இந்தியா வலியுறுத்தல்!

ட்ரோன்கள் மூலம் தாக்குதல், சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் : ஐ.நா-வில் இந்தியா வலியுறுத்தல்!

ParthasarathyBy : Parthasarathy

  |  30 Jun 2021 8:40 AM GMT

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா சபை தலைமையகத்தில், "பயங்கரவாதத்தால் உலகம் சந்திக்கும் சவால்கள்" என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்தியா சார்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்புக்கான சிறப்பு செயலர் வி.எஸ்.கே. கமுடி கலந்து கொண்டார். அப்போது ஐ.நா. பொதுக்குழுவில் உலகளாவிய பயங்கரவாதம் குறித்த விவாதத்தின்போது, ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளம் மீது ட்ரோன் மூலம் நடந்த தாக்குதல் குறித்து பேசிய இந்தியா, பயங்கரவாதிகள் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், மேலும் இது குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இந்த ஐ.நா கூட்டத்தில் கலந்து கொண்ட வி.எஸ்‌.கே. கமுடி பேசுகையில் "பயங்கரவாத செயல்களுக்கான பிரச்சாரம் , ஆள்சோ்ப்பு, நிதி உதவி பெறுவது, தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துவது ஆகியவை பயங்கரவாத அச்சுறுத்தல்களாக மாறிவிட்டன. அவற்றுக்கு தக்க பதிலடி அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் தற்போது தாக்குதல்களை நடத்த ட்ரோன்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டது பெரும் வருத்தம் அளிக்கிறது.

குறைந்த செலவிலும், எளிதிலும் ட்ரோன்கள் கிடைப்பதால் பயங்கரவாத குழுக்கள் இதை வைத்து உளவு பார்ப்பது, ஆயுதங்கள் கடத்துவது, குறிப்பிட்ட இடத்தை தாக்குவது போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றன. ஏற்கெனவே ஆளில்லா விமானங்கள் மூலம் எல்லையைத் தாண்டி ஆயுதங்கள் கடத்தப்படுவதை இந்தியா சந்தித்து வருகிறது. தற்போது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதை ஐ.நா. உறுப்பு நாடுகள் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களை இணையவழி மூலம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள் .


இதுபோன்ற சா்வதேச பயங்கரவாத சவால்களையும், தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துவதையும் எதிர்கொள்ள உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசியல், மத நம்பிக்கையின் அடிப்படையில் பயங்கரவாதத்தை பரப்பி வருபவா்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், இல்லையென்றால், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் நம்மை பரித்துவிட்டு, பலவீனத்தை ஏற்படுத்திவிடும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வரும் நாடுகளுக்கு எதிராக எந்தவித தயவும் காட்டாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News