Kathir News
Begin typing your search above and press return to search.

"இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸை எதிர் கொள்ள பெஸ்ட்" - அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்!

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸை எதிர் கொள்ள பெஸ்ட் - அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  30 Jun 2021 3:18 PM IST

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கமே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது புதிதாக டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் கொரோனா தடுப்பூசி மட்டுமே என்று இந்திய அரசாங்கம் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இந்தியாவில் தயாரித்த "கோவாக்சின்" தடுப்பூசி கொரோனா வைரஸின் ஆல்பா மற்றும் டெல்டா வகைகளுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது, என அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியாவின் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது கோவாக்சின் தடுப்பூசி, கொரோனா வைரஸின் ஆல்பா மற்றும் டெல்டா வகைகளை நடுநிலையாக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குவது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக, உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை இந்த தடுப்பூசி தூண்டுகிறது, மேலும் கொரோனா வைரஸின் உருமாற்றமடைந்த வைரசுகளுக்கு எதிராகவும் ஆன்டிபாடிகளை திறம்பட உருவாக்குகிறது." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News