Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச இணைய பாதுகாப்பு அட்டவணையில் இந்தியா கிடு கிடு முன்னேற்றம் - பத்தாம் இடத்தை பிடித்தது!

சர்வதேச இணைய பாதுகாப்பு அட்டவணையில் இந்தியா கிடு கிடு முன்னேற்றம் - பத்தாம் இடத்தை பிடித்தது!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  30 Jun 2021 11:01 AM GMT

"சர்வதேச அமைதி மற்றும் இணைய பாதுகாப்பு" என்ற தலைப்பில் பல நாடுகளுடன் விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு சபை ஏற்பாடு செய்திருந்தது. ஐ.நா-வின் இந்த விவாதத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா கலந்து கொண்டார். அப்போது அவர், பயங்கரவாதிகள் மக்களிடையே வெறுப்புணர்வை விதைக்க இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உறுப்பு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.


ஐ.நா பாதுகாப்பு சபையில் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா பேசுகையில் "பயங்கரவாத குழுக்கள் பிரச்சாரங்கள் மேற்கொள்ளவும், பொது மக்களிடையே வெறுப்புணர்வை விதைக்கவும் இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. அதே போல் இந்த கொரோனா காலத்தில், மக்களை இணையவழி மூலம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இணையதளத்தில் இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் வருங்காலத்தில் இது உலக நாடுகளுக்கிடையே பெரும் ஆபத்தை விளைவிக்கும் . பயங்கரவாத இணையவழி தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உறுப்பு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


'சைபர் செக்யூரிட்டி' எனப்படும் சர்வதேச இணைய பாதுகாப்பு அட்டவணையை ஐ.நா பாதுகாப்பு சபை வெளியிட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேச இணைய பாதுகாப்பு அட்டவணையில் இந்தியா 47-வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் அட்டவணையில் இந்தியா 10-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதில் சீனா 33-வது இடத்திலும் பாகிஸ்தான் 79-வது இடத்திலும் உள்ளது." என்று அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News