Kathir News
Begin typing your search above and press return to search.

அதிகரித்து வரும் கொரோனா: ஆறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மத்திய குழு!

அதிகரித்து வரும் கொரோனா: ஆறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மத்திய குழு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 July 2021 6:21 PM IST

உலகின் பல நாடுகளில் தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தற்போது இரண்டாவது அலை கொரோனா குறைந்து வரும் நிலையில், குறிப்பாக ஆறு மாநிலங்களில் மட்டும் தொற்று அதிகரிப்பதால் அங்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது தற்போது பரவி வரும் டெல்டா கொரோனா காரணமாக நோய் தொற்றுக்கள் மற்றும் பாதிப்புகள் அதிகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து குறிப்பாக ஆறு மாதங்களுக்கு மட்டும் மத்திய குழு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.


இந்தக் மத்திய குழு, கேரளா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, இரு நபர்கள் கொண்ட குழுவில் ஒரு மருத்துவம் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர். இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், இக்குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சென்று, பரிசோதனை மூலம் எந்த வகையைச் சேர்ந்த கொரோனா என்று கண்டுபிடிப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கும்.


மேலும் மத்திய குழு பாதிப்புகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆம்புலன்ஸ் வசதி, வென்டிலேட்டர், மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பு குறித்து ஆய்வு செய்வதுடன், மாநில அரசுக்கு தேவையான அனைத்து அறிவுரைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கும் என்று தெரிவித்து உள்ளது. எனவே ஆலோசனைகள் மற்றும் எவ்வாறு இத்தகைய கடுமையான சூழ்நிலையில் இருந்து விடுபடுவது போன்ற பல்வேறு தகவல்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News