Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பாதிப்புக்கு பிறகு, தடுப்பூசி போட்டால் டெல்டா வகை வைரஸையும் எதிர்க்கும்: ஆய்வு முடிவு! .

கொரோனா பாதிப்புக்கு பிறகு, தடுப்பூசி போட்டால் டெல்டா வகை வைரஸையும் எதிர்க்கும்: ஆய்வு முடிவு!     .
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 July 2021 6:21 PM IST

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு, ஒருவர் தனது முதல் டோஸ் தடுப்பூசி அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வீரியமான டெல்டா வகை உருமாறிய வைரஸையும் எதிர்க்கும் திறன் அதிகம் உருவாக்குகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்டா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக, கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் என்ற தலைப்பில் ICMR ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை தற்பொழுது சமர்ப்பித்துள்ளது.


குறிப்பாக இந்தியாவில் கொரோனா 2வது அலையில் டெல்டா வகை வைரஸ்களால் நோய் பரவலின் வேகம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஆல்பா வகை வைரஸ்கள் இந்தியாவில் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னையை ஏற்படுத்தின. அது மேலும் உருமாற்றம் பெற்று பீட்டா, டெல்டா வகை வைரஸ்களாக உருமாற்றம் பெற்றன. அதிலும் டெல்டா வகை வைரஸ்கள் மற்ற உருமாற்ற வைரஸ்களைவிட அதிக வீரியம் கொண்டதாக மாறிவருகிறது.


பல தடுப்பூசிகள் டெல்டா வைரசின் வீரியத்தை அழிப்பதில் திறன் குறைவாக இருக்கும் நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு, பிறகு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரசிலிருந்து அதிக பாதுகாப்பு கிடைப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, முதல் டோஸ் அல்லது 2 டோஸ் கோவிஷீல்ட் செலுத்திய பின் டெல்டா வகை வைரசை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கிறது. அந்த வகை வைரஸ்களிடம் இருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கிறது என்று ICMR ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News