Kathir News
Begin typing your search above and press return to search.

வடிகால் குழாய் வழியாக நுழையும் பங்களாதேஷிக்கள் - சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவிக்கும் மேற்கு வங்கம்!

வடிகால் குழாய் வழியாக நுழையும் பங்களாதேஷிக்கள் - சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவிக்கும் மேற்கு வங்கம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  8 July 2021 7:43 AM IST

சட்டவிரோதமாக பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறிய எட்டு பேரை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) கைது செய்துள்ளது.

ஆந்திராவின் ராஜமஹேந்திரவரம் மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களில் போலீசார் கைது செய்தனர். இந்தோ-பங்களாதேஷ் எல்லையில் வடிகால் குழாய்கள் மூலம் பயணம் செய்த எட்டு பேர், இந்தியாவிற்குள் நுழைந்ததாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் கூறியதன் அடிப்படையில்,போல் சர்வதேச எல்லையில் உள்ள வடிகால் குழாய்கள் பற்றிய உண்மைகளை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சில நிலத்தடி கட்டமைப்புகள் மூலம் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்படுகின்றன.

பாஸ்போர்ட் இல்லாமல் ஹவுரா-கோவா வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸில் பயணம் செய்த முகமது ஹாசன் (33), அவரது சகோதரர்கள் ஹைதர் அலி கான் (37), இம்ததில் கான் (21) மற்றும் மற்றொரு உறவினர் சியுதுல்லா ஷேக் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக நாட்டிற்குள் பதுங்கியதாக அவர்கள் ஒப்புக்கொண்டதாக, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஷேக் சதாம் (25), முகமது அலி அமீன் (19), முகமது சாகயாத் உசேன் (37), கய்யூம் கான் (25) ஆகியோரை ஆர்.பி.எஃப் இன் துணை ஆய்வாளர் எல் விஸ்வநாத் கைது செய்துள்ளார்.

மேலும் சில பங்களாதேஷ் மக்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், ஹவுரா-சென்னை மெயில் மற்றும் ஹவுரா-வாஸ்கோடகம அமராவதி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்பதாகவும் உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஏற்கனவே நுழைந்தவர்கள் மேற்கு வங்கம், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் குடியேறினர் என்றும், அன்றிலிருந்து கட்டுமான தளங்களில் தினசரி கூலிகளாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள் சட்டவிரோத குடியேறியவர்களின் தொடர்புகளை அறிய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News