ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களை ஊக்கப்படுத்த பிரதமரின் முயற்சி!
By : Parthasarathy
டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 115 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சென்ற ஆண்டே நடக்கவேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா நோய் தோற்று காரணமாக இந்த ஆண்டு நடக்கவுள்ளது. மேலும் இந்த ஆண்டு டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், கொரோனா தொற்றின் காரணமாக பாரவையாளர்கள் இல்லாமல் நடை பெரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுடன் பிரதமர் மோடி வரும் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கலந்துரையாடுகிறார். காணொளி காட்சி மூலம் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களை பிரதமர் மோடி ஊக்கப்படுத்த உள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவிக்க உள்ளார்.