Kathir News
Begin typing your search above and press return to search.

முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் : கொரோனாவிற்கு இடையிலும் மாணவர்கள் ஆர்வம்!

முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் :   கொரோனாவிற்கு இடையிலும் மாணவர்கள் ஆர்வம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 July 2021 6:14 PM IST

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில், நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் தற்போது முதல் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமாக தற்பொழுது மே 3-ம் தேதி ஆராய்ச்சிப் படிப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனாவிற்கு இடையிலும் அங்கே உயர் கல்வி படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் வருகிறார்கள். அங்கு மொத்தமுள்ள 30 இடங்களுக்கு, சுமார் 500இக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


வழக்கமான ஆராய்ச்சிப் படிப்புடன் வேலை பார்த்துக்கொண்டே ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பும் இங்கு வழங்கப்படுகிறது. ஆராய்ச்சிப் படிப்புகளில் வழக்கமான தொழில்நுட்பத்தை விட இங்கு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், கணக்கீட்டு நுண்ணறிவு, இமேஜிங் உள்ளிட்ட பிரபல படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்துக் கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். சாஜி கோபிநாத் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு தேவை அதிகமாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. அறிவு சார்ந்த சமூகத்தை நோக்கி கேரளா முன்னேறி வருகிறது. PhD மாணவர் சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வு அடுத்த வாரம் தொடங்கும். ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்க உள்ளன. மேலும், ஆராய்ச்சிப் படிப்புகள் தவிர்த்து MCA மற்றும் M.Tech படிப்புகளும் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News