பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு : மீண்டும் அதிர வைக்கும் கொரோனா!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது குறைந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்பொழுது மீண்டும் கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 42,766 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். எனவே மக்கள் அலட்சியம் செய்யாமல் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை கடைபிடித்து நடப்பதன் மூலமாக நிச்சயமாக இந்த தொற்று நோயை நம்மால் எளிதில் வெற்றி கொள்ள முடியும். மேலும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் மூலமாக நோய் தொற்றிலிருந்து தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 1,206 பேர் உயிரழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 7 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.