ட்ரோன் பறக்க தடை : கொச்சி கப்பற்படையின் திடீர் அறிவிப்பு!

By : Bharathi Latha
கடந்த மாதம் முன்பு ஜம்மு விமானப் படைத்தளத்தில் ஆளில்லா குட்டி விமானம் ஆன ட்ரோன் பறக்கப்பட்டு அதன் மூலம் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இந்த ட்ரோன் பாகிஸ்தானின் உடையது என்றும் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜம்மு விமானப்படை தளத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவ படையின் சார்பாக தீவிர கண்காணிப்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மற்ற மாநிலங்களில் கூட ட்ரோன் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யார் அதை இயக்குகிறார்களோ? அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது கேரளாவில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
கேரளாவில் தளமாகக் கொண்டு அங்கு உள்ள கொச்சியில் இந்திய கடற்படை தளம் செயல்பட்டு வருகிறது. கடற்படை தளத்தில் இருந்து, 3 கி.மீ சுற்றளவில் ட்ரோன் மற்றும் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொச்சி கடற்படை தளத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த தடையை மீறி இப்பகுதியில் பறக்கும் ட்ரோன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவதுடன் அதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் என கடற்படை சார்பில் அறிவித்துள்ளது.
