ட்ரோன் தாக்குதல் எதிரொலி: முக்கிய இடங்களில் தடுப்பு சாதனம் பொருத்த மத்திய அரசு முடிவு!

By : Bharathi Latha
கடந்து மாதத்தில் இந்திய விமானப் படைத்தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தி நடத்திய தாக்குதல் ஆகும். பயங்கரவாதிகள் தற்பொழுது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதகமான முறையில் தாக்குதல் நடத்தும் உத்தியை பயன்படுத்தி வருகின்றார்கள் எனவே அதற்கு ஏற்றவாறு இந்திய ராணுவம் அதிரடியான தற்பொழுது ஒரு முடிவு எடுத்துள்ளது. அதாவது முக்கியமான இடங்களில் முன்கூட்டியே ட்ரோன்களை கண்டறிந்து அவற்றை செயலிழக்க செய்யும் கருவிகளை பொருத்துவதே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
இதையடுத்து முப்படைகளின் தளங்கள் உட்பட முக்கியமான இடங்களில், ட்ரோன் செயலிழப்பு சாதனத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது சரியானது. இது பற்றி ராணுவ அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்திய விமானப்படை, 10 ட்ரோன் தடுப்பு கருவிகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும். இந்த கருவி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இருக்கும். ட்ரோன்கள் பறந்து வருவதை துல்லியமாக கண்டறிந்து, அதை நடுவழியிலேயே செயலிழக்க வைக்கும் திறன் உடையது. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் வரும் ட்ரோன்களை, இந்த கருவி சுட்டு வீழ்த்தும்.
முப்படைகளின் தளங்கள், விமான நிலையங்கள், முக்கியமான கட்டடங்கள், சுற்றுலா தலங்களில் இந்த கருவியை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது" என்று அவர் கூறினார். மேலும் ராணுவ தலைமை தளபதி நரவானே அவர்கள் இது பற்றிக் கூறுகையில், "நாட்டின் எல்லையை பாதுகாப்பது இப்போதும் மிகவும் கடினமான பணியாக மாறியுள்ளது.
நேருக்கு நேராக தாக்கும் பயங்கரவாதிகளின் தாக்குதல் தற்போது குறைந்துள்ளது மறைமுகமாக குறிப்பாக ட்ரோன்கள் மூலமாக மற்ற நாடுகளை தாக்கும் கலாச்சாரம் தற்போது அதிகரித்துள்ளது. இதை எதிர்கொள்ள அதி நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
