Kathir News
Begin typing your search above and press return to search.

மாற்று மின் சக்தியில் அடுத்தகட்ட அடி எடுத்து வைக்கும் மத்திய அரசு - செயல்பாட்டுக்கு வரும் அசாத்திய திட்டங்கள்!

மாற்று மின் சக்தியில் அடுத்தகட்ட அடி எடுத்து வைக்கும் மத்திய அரசு - செயல்பாட்டுக்கு வரும் அசாத்திய திட்டங்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  14 July 2021 3:09 AM GMT

நாட்டின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்காவை குஜராத்தின் கட்ச் பகுதியில் ராண் என்ற இடத்தில் என்டிபிசி அமைக்கவுள்ளது.

இந்நிறுவனம், குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ராண் என்ற இடத்தில் 4750 மெகாவாட் திறனுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைக்க, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் அனுமதி பெற்றது. இது நாட்டின் மிகப் பெரிய சூரியமின்சக்தி பூங்காவாக இருக்கும். பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யவும் என்டிபிசி ஆர்இஎல் திட்டமிட்டுள்ளது.

பசுமை எரிசக்தி துறை வளர்ச்சியின் ஒரு பகுதியாக, என்டிபிசி நிறுவனம், 2032ம் ஆண்டுக்குள் 60 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க திட்டமிட்டுள்ளது. என்டிபிசி நிறுவனம் தற்போது, 70 மின் திட்டங்கள் மூலம் 66 ஜிகா வாட் திறன் அளவுக்கு மின் திட்டங்களை நிறுவியுள்ளது. கூடுதலாக 18 ஜிகா வாட் திறனுள்ள மின் திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதே போல கரிமம் இல்லாத புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உறுதி செய்யும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு வலு சேர்க்கும் வகையில் நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் இயக்கத் திட்டத்தை நிறுவுவதற்கு லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் எல்ஏஹெச்டிசி ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

வெளியீடு இல்லாத பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் இயக்கத் திட்டத்தைக் கொண்ட இந்தியாவின் முதல் நகரமாக லே விரைவில் உருவாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News