Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளாவில் தலைதூக்கும் ஜிகா வைரஸ்: பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கேரளாவில் தலைதூக்கும் ஜிகா வைரஸ்: பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 July 2021 6:49 PM IST

இந்தியாவில் தற்பொழுது குறைந்து வரும் கொரோனா தொற்றுகளுக்கு இடையில், புதிதாக ஜிகா வைரஸ் மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கேரளாவில் ஏற்கனவே ஜிகா வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஜிகா வைரஸ்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. கேரளாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்து இருப்பது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே கேரளாவில் இன்னும் கொரோனா காரணமாக சராசரி பாதிப்பு உச்சத்தை தொட்டே வருகிறது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் கேரளாவில் முதல்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு, சிக்கன்குனியா ஆகிய நோய்களை பரப்பக்கூடிய கொசுக்களின் மூலமாகவே ஜிகா வைரஸும் பரவுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.


ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் கேரள அரசு ஈடுபட்டு வரும் நிலையில், அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் ஏற்கனவே 19 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News