Kathir News
Begin typing your search above and press return to search.

பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பொதுவெளியில் தீ வைத்து எரிப்பு : அதிரடி காட்டும் அசாம் முதல்வர்!

பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பொதுவெளியில் தீ வைத்து எரிப்பு : அதிரடி காட்டும் அசாம் முதல்வர்!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  18 July 2021 11:10 AM GMT

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க கட்சியை சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி புரிந்து வருகிறார். அவர் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அசாம் மாநிலத்தின் நன்மைக்காகவும் மற்றும் பொது மக்களுக்காகவும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.


அசாமில் உள்ள பல இளைஞர்கள் சிறு வயது முதல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்களுடைய வாழ்க்கையே இழந்து தவிக்கின்றனர். இதன் காரணமாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை அழிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அசாம் காவல்துறையின் ஒத்துழைப்போடு தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த போதை பொருள் அழிக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் ஹெராயின், கஞ்சா, ஓபியம் உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான போதை பொருட்களை பொதுவெளியில் முதல்வர், காவல்துறையின் உதவியுடன் தீ வைத்து கொளுத்தி, எரித்து வருகின்றனர்.


இது குறித்து ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "போதை பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, இன்றும் நாங்கள் எரித்திருக்கிறோம். இது வரை நாங்கள் 163 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம், இன்று மட்டும் 36 கோடி ரூபாய் அளவுக்கான போதை பொருட்களை எரித்துள்ளோம்.


போதை பொருட்கள் கடத்தல் மற்றும் போதை பொருட்களை எரிப்பது போன்ற விஷயங்களில் மாநில காவல்துறை மற்றும் அசாம் மாநில மக்கள் தெடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். அசாம் அரசை பொறுத்த வரை போதை பொருட்களுக்கு எதிராக சிறிதளவு கூட சகிப்புத்தன்மை கிடையாது. கூடிய விரைவில் அசாம் மாநிலம் போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்." என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News