Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லைப் பகுதி முழுதும் கட்டுக்குள் வந்துவிடும் : அமித்ஷாவின் பலே திட்டம்!

இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லைப் பகுதி முழுதும் கட்டுக்குள் வந்துவிடும் : அமித்ஷாவின் பலே  திட்டம்!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  18 July 2021 11:20 AM GMT

BSFஎனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையின் 18 வது அலங்கார விழா நேற்று டில்லியில் நடைபெற்றது. இந்த அலங்கார விழா நிகழ்ச்சியில் நமது நாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது நமது இந்திய நாட்டின் எல்லையில் சிறப்பாக செயல்பட்டு நமது பாரத தாய்நாட்டிற்கு சேவை செய்த எல்லை காவலர்களுக்கு பதகங்களை வழங்கி பாராட்டினார்.


மேலும் இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் "நமது இந்திய நாட்டின், 7,500 கி.மீ., நீள எல்லைப் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் வேலிகள் போடப்பட்டு அடைக்கப்பட்டு விட்டன. வெறும் 3 சதவீத எல்லைப் பகுதி மட்டுமே வேலிகள் இன்றி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அந்த பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கும், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் போதை பொருட்களை கடத்துவதற்கும் உதவியாக உள்ளது.


இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் ஒன்றை உறுதி அளிக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள், நம் எல்லைப் பகுதி முழுதும் வேலிகள் வைத்து அடைக்கப்பட்டு விடும். அடுத்த ஆண்டு முதல், எல்லைப் பகுதிகளை கடக்கும் அளவுக்கு இடைவெளிகள் இருக்காது. இந்த எல்லைப் பகுதிகள் முழுவதையும் அடைக்க, அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், நிர்வாகத்தில் உள்ள தடைகளை அகற்றியும், பல்வேறு முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. எல்லைப் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பு; அதை கருத்தில் வைத்து உடைக்க அல்லது தகர்க்க முடியாத அளவுக்கு புதிய வகையிலான எல்லை வேலிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன." என்று அமித் ஷா கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News