Kathir News
Begin typing your search above and press return to search.

"தடுப்பூசி குறித்த தவறான தகவலை காங்கிரஸ் பரப்புகிறது" - பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு!

தடுப்பூசி குறித்த தவறான தகவலை காங்கிரஸ் பரப்புகிறது - பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  21 July 2021 2:31 AM GMT

நேற்று டெல்லியில் மழைக்கால கூட்டத்தொடர் லோக் சபாவில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்த தொடங்கினார். அந்த சமயத்தில் எதிர் கட்சி அமைச்சர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு பிரதமரை பேசவிடாமல் தொந்தரவு செய்தனர். அப்போது பிரதமர் பெண்கள், ஏழை மக்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த பலர் அமைச்சர்கள் ஆக அமர்ந்துள்ளது எதிர் கட்சிக்கு பிடிக்கவில்லை என்று கூறினார்.


இதனை அடுத்து டில்லியில் பா.ஜ.க எம்.பி. க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி பேசுகையில் "பா.ஜ.க ஆட்சியில் இருப்பதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் தோல்வியடைந்ததை காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மத்திய அரசின் பணிகளை பா.ஜ.க எம்.பி. க்கள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும், அப்போது தான் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை நம்மால் முறியடிக்க முடியும் மற்றும் மக்களும் அதை தெரிந்து கொள்வார்கள்.


இந்தியாவை கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த எண்ணத்திலேயே காங்கிரஸ் உள்ளது. இதன் காரணத்தால் மக்கள் நம்மை தேர்வு செய்ததை காங்கிரஸ் கட்சியால் ஏற்று கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சியாக, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை அந்த கட்சி கடுமையாக எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இந்தியாவில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லாத போது, வேண்டுமென்றே இந்தியாவில் தடுப்பூசி குறித்த தவறான தகவல்களையும் மற்றும் பொய் செய்திகளையும் காங்கிரஸ் பரப்புகிறது.

அதிகாரத்தில் இருப்பது தங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என காங்கிரஸ் நினைக்கிறது. இதனால், மக்கள் அளித்த உத்தரவை காங்கிரஸ் ஏற்கவில்லை. எல்லா மாநிலங்களிலும் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ், நம்மை பற்றி கவலைப்படுகிறது." என்று பிரதமர் மோடி பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News