Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்கா - இந்தியா உறவு மேலும் வலுப்பட மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு !

அமெரிக்கா - இந்தியா உறவு மேலும் வலுப்பட மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 July 2021 12:44 PM GMT

இந்தியா கடந்த வாரம் அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஹெலிகாப்டர்களை கடற்படை பாதுகாப்பிற்காக ஒப்பந்தத்தின் பெயரில் வாங்கியது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் விளங்கும் இந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கிய முதல் நாடு இந்தியாதான் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்க பொதுவாக தன்னுடைய அதிநவீன தொழில்நுட்ப ஹெலிகாப்டர்களை எந்த நாட்டிற்கும் வழங்காது. ஆனால் அமெரிக்கா, இந்தியாவிற்கு இத்தகைய ஹெலிகாப்டர்களை பாதுகாப்பிற்காக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


எனவே இது குறித்த அமெரிக்காவின் முப்படை தலைவரான பெண்டகன் கூறுகையில், "கடற்படை ஹெலிகாப்டர் விற்பனையால் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மேம்படும். இந்தியாவுக்கு கடற்படை ஹெலிகாப்டர், கண்காணிப்பு விமானத்தை விற்பனை செய்வதால் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்படும் என்று அவர் கூறினார்.

மேலும் இதுபற்றி அவருடைய செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், "அமெரிக்க கடற்படையிடம் இருந்து அனைத்து பருவ காலங்களிலும் சிறப்பாக செயல்படக் கூடிய '24 MH60R சீஹாக்' ரக ஹெலிகாப்டர்களை இந்தியக் கடற்படை கடந்த வாரம் பெற்றது. இதன் மூலம், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பும் தகவல் பரிமாற்றங்களும் மேம்படும்" என்று அவர் தெரிவித்தார்.


மேலும் இத்தகைய MH60R ரக ஹெலிகாப்டர்களை கடற்படையின் பல்வேறு போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியும். அவற்றில் ஏவுகணை உள்ளிட்ட பிரத்யேக ஆயுதங்கள் மற்றும் கருவிகளைப் பொருத்திக் கொள்ள முடியும். அந்த ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News