Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தாக்கம்: அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு அதிரடி!

கொரோனா தாக்கம்: அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு அதிரடி!
X

MuruganandhamBy : Muruganandham

  |  23 July 2021 8:32 AM IST

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் 51 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

சமையல் எண்ணெய்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக, கச்சா பாமாயிலின் மீதான வரியை 5 சதவீதம் குறைத்து அரசு அறிவித்தது. வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறையால் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் எனும் மத்திய அரசு நிதியுதவி பெற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம், 2020, அரசால் கொண்டுவரப்பட்டது. ஆனல், அதன் செயல்படுத்தலை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

மின்-வர்த்தகத்தில் நியாயமில்லா வணிக நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், ஒழுங்குமுறைச் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் முன்மொழியப்பட்டது. இது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அரசு வரவேற்றுள்ளது.

ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட உள்கட்டமைப்புக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை சாராத பொருட்கள் தகுதி பெறும். 2017-18-ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ 196.15 கோடி செலவிடப்பட்ட நிலையில், 2020-21-ம் ஆண்டில் ₹207.40 கோடி செலவிடப்பட்டுள்ளது.

குளிர் சங்கிலி திட்டத்தின் கிழ், தமிழகத்தில் 17 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 10 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, 7 திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் திட்டங்களின் மதிப்பு ரூ 523.97 கோடியாகவும், ஒப்புதல் அளிக்கப்பட்ட மானியம் ரூ 117.01 கோடியாகவும், வழங்கப்பட்டுள்ள மானியம் ₹70.80 கோடியாகவும், முதலீட்டின் மதிப்பீடு ₹406.96 கோடியாகவும், உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 10,200 ஆகவும், பலன் அடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 1.62 கோடியாகவும் உள்ளது.

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்ட சீர்திருத்தத்தின் கீழ் ரூ 37600 கோடி கூடுதல் கடன் வாங்க 2020-21-ஆ ம் ஆண்டில் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ 8,813.00 கோடி கடன் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ₹37,600 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News