Kathir News
Begin typing your search above and press return to search.

டிஜிட்டல் சந்தா தொழில்நுட்பத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா: ஐ.நா தகவல்!

டிஜிட்டல் சந்தா தொழில்நுட்பத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா: ஐ.நா தகவல்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 July 2021 6:11 PM IST

தற்பொழுது ஐக்கிய நாடு சபைகள் மூலமாக உலக நாடுகளில் எந்த அளவிற்கு டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதிகள் உள்ளன என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஆய்வின் முடிவில் இந்தியா 90.32 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் இந்தியாவிற்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.


இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் கூறுகையில், டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) நடத்திய ஆய்வில் இந்தியா 90.32% மதிப்பெண்களை பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் இந்த அளவு 78.49 சதவீதமாக இருந்த நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் 143 நாடுகளை பொருளாதாரங்களை மதிப்பீடு செய்தபின், 2021ம் ஆண்டு இந்தியாவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கவகையில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(OECD) உறுப்பினராக உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, நார்வே, பின்லாந்து போன்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது. குறிப்பாக ,வெளிப்படைத் தன்மை விஷயத்தில் இந்தியா 100 சதவீத மதிப்பெண்ணை பெற்றுள்ளது. வர்த்தகத்தில் பெண்கள் என்ற பிரிவில் 66 சதவீத மதிப்பெண்களை இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News