ட்ரோன் மூலம் பயங்கரவாத தாக்குதலை கட்டுப்படுத்த, பாதுகாப்பு படை பலே திட்டம்!
By : Parthasarathy
சில நாட்களாக இந்தியாவில் உள்ள ஜம்மு எல்லையில் பயங்கரவாதிகள் ட்ரோன்ர்கள் மூலம் தாக்குதல் நடத்துவது மிகவும் அதிகமாகி வருகிறது.பாகிஸ்தானில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள தங்களது பயங்கரவாத தொடர்புகளுக்கு ஆயுதங்களையும், வெடி குண்டுகளையும் கடத்துவதற்கும் மற்றும் குண்டு வீசி தாக்குதல் நடத்தவும் ட்ரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கோலாரில் சோதித்துப் பார்க்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு உபகரணத்தின் முன்மாதிரியை சோதித்து பார்ப்பதற்காக, ஜம்மு மற்றும் பஞ்சாப் எல்லைக்கு கொண்டு வருமாறு DRDO-விடம் எல்லை பாதுகாப்பு படை கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில், ட்ரோன் எதிர்ப்பு உபகரணத்தின் செயல்பாடுகளை பாதுகாப்பு படையினர் ஜம்முவில் சோதித்து பார்த்தனர். அப்போது அங்கிருந்த கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இந்த உபகரணம் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக அதை பார்த்த பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, 4 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரேடார் கண்காணிப்பு திறன், 2 கிலோ மீட்டருக்குள் எதிரி ட்ரோன்களை தடுக்கும் திறன், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் அந்த ட்ரோனை அழிக்கும் திறன் உள்ளிட்ட செயல்பாடுகள் அந்த ட்ரோன் எதிர்ப்பு உபகரணத்திடம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் ட்ரோன் எதிர்ப்பு உபகரணத்தை இந்தியாவின் எல்லை பகுதிகளில் பயன்படுத்த பாதுகாப்பு படையினர் உத்தரவிட்டுள்ளனர். அதே போல் இந்தியாவின் சுதந்திர தினம் இன்னும் சில நாட்களில் வரவுள்ள நிலையின் இந்த ட்ரோன் எதிர்ப்பு உபகரணத்தை சிவப்பு கோட்டையில் வைத்து பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.