இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி? செப்டம்பர் மாதம் முடிவு!

By : Bharathi Latha
இந்தியாவில் அனைவரும் எதிர்பார்ப்புகளின் ஒன்றாக குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது தொடங்கப்படும். மேலும் அவர்களுடைய நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமாக தடுப்பூசி செயல்படுமா? என்பது குறித்து பெற்றோர்களின் பெரிய கவலைகளும் ஒன்றாக இருந்து வந்தது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து செய்தியை வெளியிட்டுள்ளார். குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா இது பற்றிக் கூறுகையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்காக தயாரித்துள்ள தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் சோதனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதியளித்து உள்ளதைத் தொடர்ந்து இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த பரிசோதனையில் கோவாக்சின் தடுப்பூசியின் 3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த பரிசோதனையின் முடிவுகள் வெளியானால் அந்த மருந்தை குழந்தைகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக, செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வாய்ப்பு ஏற்படும் என்று அவர் கூறினார்.
