கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையை ரத்து செய்த பிரேசில் அரசு : பின்னணி என்ன?
By : Bharathi Latha
இந்தியாவில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி ஏற்றுமதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரேசில் அரசு செய்திருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் வெளிநாட்டு தடுப்பூசிகளை அனுமதிப்பது குறித்த அந்த நாட்டில் உள்ள மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகள் பரிசோதனை செய்து பிறகு, அந்த பரிசோதனையின் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருந்தால் மட்டும்தான் அவர்கள் அந்த தடுப்பூசியை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்வார்கள். அந்த வகையில் தற்பொழுது பிரேசிலில் உள்ள பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்சா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன்,l இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் மருந்தை வினியோகம் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் 2 கோடி கோவாக்சின் மருந்து சப்ளை செய்வது, தொடர்பாக பிரேசில் நிறுவனத்துடன் 32.4 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்தது. இதனால் அதிருப்தியில் இருந்த பாரத் பயோடெக் நிறுவனம் பிரேசிலின் பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சில நாட்களுக்கு முன் திடீரென ரத்து செய்தது.
இந்நிலையில் பிரசேலின் மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்பான அன்விசா அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் படி, "பிரேசிலில் கோவாக்சின் தடுப்பூசியின் பரிசோதனை ரத்து செய்யப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரேசிலில் உள்ள பெர்சியா மெடிகாமென்டோஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட உடன், கிளினிக்கல் பரிசோதனைக்கான அனுமதியும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு தற்பொழுது மறுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.