Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?

இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 July 2021 7:46 PM IST

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அவர்களின் ஆட்சியின் கீழ் தற்பொழுது, அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். நேற்று இரவு அவர் டில்லி வந்தடைந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் முறையாக இவர் வந்து தன் மூலமாக இந்திய மற்றும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? என்பது குறித்தும் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் இந்தியாவிற்கு வந்த முதல் முறையாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை இன்று ஆன்டனி பிளின்கன் அவர்கள் சந்தித்து பேசுகிறார். இந்தியா – அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம், இந்தோ-பசிபிக் கூட்டுறவை விரிவுபடுத்துவது உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சு நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இரண்டு நாள் சுற்றுப்பயணம் என்பதால் முதல் நாளான இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இவர் பேசுகிறார். மேலும் இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். பிறகு அமெரிக்க அமைச்சர் பிளின்கன், டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News