கேரளா: மீண்டும் நிபா வைரஸால் அதிர்ச்சி - விரைந்த மத்திய குழு!
கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக மத்திய குழுவினர் அங்கு சென்றுள்ளார்.
By : Bharathi Latha
கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பே இன்னும் முடியாத நிலையில் நிபா வைரஸால் பாதி்க்கப்பட்டு 12-வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரள மக்களை தற்பொழுது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் குறித்து அறியவும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் விரைவு மருத்துவக் குழுவினர் கேரளா சென்றுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் கூறுகையில், "சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அந்த சிறுவனின் உடலில் இருந்து ரத்தமாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுத்து புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் அந்த சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. குறிப்பாக இந்த நிபா வைரஸ் என்பது பழம்தின்னி வவ்வால்களில் இருந்து பரவும். நிபா வைரஸ் உறுதியானதையடுத்து, அந்த சிறுவனுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு, தேடப்பட்டு வருகின்றனர்.
அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இதுவரை கேரளாவில் உள்ள எந்த ஒரு குழந்தைகளுக்கும் இது போன்ற ஒரு அறிகுறி ஏதுமில்லை, அச்சப்படுவதற்கு தேவையில்லை. மாநில சுகாதாரத்துறையினர் தொடர்ந்து சூழலைக் கண்காணித்து வருகின்றனர். சிறப்பு அதிகாரிகளும், சிறப்புக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் ஏற்கெனவே கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மத்திய சுகாதாரத்துறையின் தேசிய நோய் தடுப்புப் பிரிவு கேரளாவுக்கு விரைந்துள்ளனர். மாநில சுகாதாரத் துறையினருக்குத் தேவையான அறிவுரைகள், வழிகாட்டல்களை மத்திய சுகாதாரப் பிரிவினர் வழங்கி வருகிறார்கள்.
Input & Image courtesy: Indian Express