Kathir News
Begin typing your search above and press return to search.

நமது அமைச்சர் நல்ல நடன கலைஞரும் கூட- மத்திய சட்டதுறை அமைச்சரை பாராட்டிய பிரதமர் !

நமது அமைச்சர் நல்ல நடன கலைஞரும் கூட- மத்திய சட்டதுறை அமைச்சரை பாராட்டிய பிரதமர் !
X

TamilVani BBy : TamilVani B

  |  2 Oct 2021 7:52 AM IST

வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க வின் முகமாக திகழ்பவர் கிரண் ரிஜிஜூ. விளையாட்டுதுறை இணையமைச்சராக இருந்த இவர் தற்போது சட்டதுறை அமைச்சராக உள்ளார்.

மத்திய அரசின் திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் எந்த அளவிற்கு செயல்படுகின்றன என அவர் ஆய்வு மேற்கொள்கிறார் .மேலும், அங்குள்ள மக்களின் தேவைகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துகிறார்.

இந்நிலையில், அருணாச்சலபிரதேச மாநிலத்திற்கு ஆய்வு பணிக்காக சென்றுள்ளார். அப்போது சஜோலாங்க் இன மக்கள் அமைச்சரை உற்சாகமாக வரவேற்றனர்.

தங்களின் பாரம்பரிய நடனத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். அமைச்சரும் பாரம்பரிய நடனததை உற்சாகமாக ஆடினார். அதனை அவர் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், அமைச்சரின் டிவிட்டர் பதிவை குவாட் செய்த பாரத பிரதமர் மோடி நமது சட்டதுறை அமைச்சர் நல்ல டான்சரும் கூட என அவர் திறமையை பாராட்டியுள்ளார். மேலும், அருணாச்சல பிரதேசத்தின் இந்த துடிப்பான கலாச்சாரத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Source: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News