இந்தியாவில் எத்தனை பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது: மத்திய அரசு புதிய தகவல்!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது மிகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 138 கோடியே 2 லட்சத்து 23 ஆயிரத்து 188 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
By : Thangavelu
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது மிகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 138 கோடியே 2 லட்சத்து 23 ஆயிரத்து 188 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும், 82 கோடியே 92 லட்சத்து 19 ஆயிரத்து 869 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தமாக 55 கோடியே 10 லட்சத்து 3 ஆயிரத்து 319 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டியா விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் இதுவரை 88 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 57 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் 161 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.