Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் பாதுகாப்பில் அலட்சியம்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!

பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்ற கான்வாய் வாகனத்தை காங்கிரஸ் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பிரதமர் மீண்டும் டெல்லி திரும்பினார்.

பிரதமரின் பாதுகாப்பில் அலட்சியம்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 Jan 2022 2:17 PM GMT

பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்ற கான்வாய் வாகனத்தை காங்கிரஸ் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பிரதமர் மீண்டும் டெல்லி திரும்பினார். இதனிடையே பிரதமரின் பாதுகாப்பில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், நீதித்துறை விசாரணை வேண்டி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுமீது நாளை (ஜனவரி 7) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக நேற்று (ஜனவரி 6) சென்றிருந்தார். பெரோஸ்பூர் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல முற்பட்டபோது வானிலை மோசமானதால், சாலை மார்க்கமாக பிரதமர் அந்த இடத்துக்கு சென்றார். அப்போது பிரதமரின் கான்வாய் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலத்தின் அருகாமையில் காங்கிரஸ் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த கூட்டத்தை பஞ்சாப் மாநில போலீசார் அகற்றவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. இதனால் பிரதமரின் பாதுகாப்பில் மிகப்பெரிய குளறுபடி நடக்கவிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்ற அமைச்சர்கள் என பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் எதிர் தரப்பாக பஞ்சாப் மாநில தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில் இது போன்ற மோசமான நிகழ்வுகள் நடைபெறக் கூடாது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். பிரதமரின் வாகனம் மறிக்கப்பட்ட சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இது பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (ஜனவரி 7) விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News