Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி நலமுடன் வாழ முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கோயிலில் சிறப்பு யாகம்!

பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடனும், நலமுடனும் வாழ்வதற்கு பாஜக தலைவர்கள் நாடு முழுவதும் கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி நலமுடன் வாழ முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கோயிலில் சிறப்பு யாகம்!

ThangaveluBy : Thangavelu

  |  7 Jan 2022 4:49 AM GMT

பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடனும், நலமுடனும் வாழ்வதற்கு பாஜக தலைவர்கள் நாடு முழுவதும் கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சமீபத்தில் சென்றிருந்தார். அப்போது அவர் சென்ற கான்வாய் அருகாமையில் போராட்டக்காரர்கள் சூழ்ந்துவிட்டனர். இதனால் அவரது உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு ஏற்படுத்திவிட்டதாக பாஜகவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.


இதனிடையே பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடனும், நலமுடனும் வாழ்வதற்கு பாஜகவினர் நாடு முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் டெல்லியில் உள்ள கோயிலில் மிருத்யுஞ்ஜய பூஜையில் ஈடுபட்டார். அவருடன் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதே போன்று நாடு முழுவதும் பல நகரங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

Source: Dinamalar

Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News