தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!
By : Thangavelu
யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி போட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஒன்றில் மத்திய தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது: ஒரு தனிநபரின் விருப்பத்திற்கு மாற்றாக வலுக்கட்டாயமாக தடுப்பூசியை செலுத்துமாறு இந்திய அரசோ, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ நிர்பந்திக்கவில்லை. கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மக்கள் நலன் கருதியே தடுப்பூசி போடப்படுகிறது.
அது மட்டுமின்றி மக்கள் நலன் கருதி தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. மின்னணு ஊடகம், சமூக வலைதளம் என்று அனைத்திலும் தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை சுகாதாரத்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாருடைய விருப்பத்திற்கு மாற்றாகவும் தடுப்பூசியை வலுக்கட்டாயமாக செலுத்த முடியாது. அதே சமயத்தில் தடுப்பூசி சான்றிதழும் கையோடு எடுத்து செல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: India.Com