Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி பற்றி விமர்சனம்: தனியார் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ்!

பிரதமர் மோடி பற்றி விமர்சனம்: தனியார் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ்!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Jan 2022 8:31 AM IST

பிரதமர் மோடி குறித்து தவறான நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை வைத்து காமெடி நிகழ்ச்சி செய்வதாக சில டைரக்டர்கள் தவறான தகவல்களை கொடுத்து பேச வைக்கின்றனர். அதே போன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒன்று ஜனவரி 15ம் தேதி ஒளிபரப்பானது. அதில் பிரதமர் மோடி குறித்து மறைமுகமான விமர்சனத்தை டைரக்டர் வைத்துள்ளார். அதனை சிறுவர்களும் அப்படியே பேசியுள்ள சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக பாஜகவும் கண்டனத்தை பதிவிட்டுள்ளது.

இந்நிலையில், சிறுவர்களை வைத்து ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி நிர்வாக இயக்குனரிடம் மத்திய தகவல், ஒளிபரப்பு துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து 7 நாட்களில் மத்திய அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News