"ராமர், கிருஷ்ணர் போன்று மோடி ஒரு அவதாரம்!"- மெய்சிலிர்ப்பூட்டும் அமைச்சரின் பேச்சு!
By : Dhivakar
"பிரதமர் நரேந்திர மோடி ஒரு அவதாரம், சாத்தியமற்ற செயல்களை செய்தார். அவர் கடவுளின் அவதாரம்" என்று பாரத பிரதமர் குறித்து, மத்தியப் பிரதேச மாநில விவசாயத் துறை அமைச்சர் கமல் பட்டேல் கூறியது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
"எப்பொழுதெல்லாம் தர்மம் வீழ்ந்து, அதர்மம் தழைத்தோங்குமோ அப்பொழுதெல்லாம் கடவுள் அவதரிப்பார்" என்று நம் புராணங்களும் இதிகாசங்களும் கூறுகிறது. அதே போல்,
மத்தியில் 2014க்கு முந்தைய 10 வருடகாலம் காங்கிரஸ் கட்சியின் பொம்மலாட்ட ஆட்சி நடைப்பெற்றது. அப்பொழுது நாட்டின் பொருளாதாரம், சட்ட ஒழுங்கு மற்றும் ஊழல் என ஒரு மோசமான 10 வருட கால காங்கிரஸ் ஆட்சியில். அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்தக் கொடுமையான சூழ்நிலையில் தான் பிரதமர் நாற்காலியில் நரேந்திர தாமோதரதாஸ் மோடி அமர்ந்தார். அதன் பின்னர் நடந்தது எல்லாம் உலகம் அறியும், தன் திறமையான ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம், சட்ட ஒழுங்கு, உள்கட்டமைப்பு என அணைத்து துறைகளை நவீனத்துவத்துடன் வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று, வல்லரசு நாடுகளே மெச்சும் வகையில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநில விவசாய துறை அமைச்சர் கமல் பட்டேல், பிரதமர் பற்றி மெய்சிலிர்ப்பூட்டும் வகையில் குறிப்பிட்டது தேசிய அளவில் கவனம்பெற்றுள்ளது. அவர் கூறியதாவது:
ராமர் மனித உருவில் அவதாரம் எடுத்து, ராவணனைக் கொன்று, மற்ற தீய சக்திகளை வென்று, மக்களைப் பாதுகாத்து 'ராமராஜ்யத்தை' நிறுவினார்.
கம்சனின் அட்டூழியங்கள் அதிகரித்தபோது, பகவான் கிருஷ்ணர் பிறந்து அவரது கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வந்தார், சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளித்தார்.
அதேபோல், காங்கிரஸ் ஆட்சியில் அட்டூழியங்கள் அதிகரித்த பொழுது, நாட்டின் கலாச்சாரம் அழிக்கப்பட்டு, விரக்தியின் சூழல் எங்கும் நிலவியபோது, அதை முடிவுக்குக் கொண்டுவர நரேந்திர மோடி பிறந்தார்.
இவை ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாத ஒன்று.எனவே, பிரதமர் நரேந்திர மோடி ஒரு அவதாரம்.
என்று கூறியுள்ளார்.