வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமை முகாமில் இருக்கத் தேவையில்லை: மத்திய அரசு புதிய உத்தரவு!
By : Thangavelu
வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள் இனிமேல் தனிமை முகாமில் அடைப்பட்டிருக்க தேவையில்லை என்று மத்திய அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்புபவர்கள் 15 நாட்கள் தனிமை முகாமில் வைத்த பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பினால் உடனடியாக வீட்டுக்கு சென்று உறவினர்களை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தனர்.
இந்நிலையில், பழைய வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இனிமேல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் பயணிகள் யாரும் தனிமை முகாமில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தபோதிலும் கொரோனா தொற்று தென்படும் பட்சத்தில் அவர்கள் தனிமை முகாமில் தங்க வேண்டிய கட்டாயமாகும். மேலும், சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar