"நான் வருகிறேன் இந்தியாவில் இடம் இருக்கிறதா?" என்று புகழ்பெற்ற கனடா எழுத்தாளர், மோடியை நோக்கி வேண்டுகோள்!

By : Dhivakar
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது நாட்டில் சமாளிக்க முடியாத டிரக்கர் போராட்டத்தை சந்தித்து வருகிறார். இதனால் நாட்டில் அவசர நிலையையும் அமல்படுத்தியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து கூறியிருந்தார், இப்போது அவரது நாட்டில் வரலாறு காணாத போராட்டம் வெடித்துள்ளது. கனடா அரசு விதித்த கடுமையான கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் முக்கிய சாலைகள், முக்கிய பாலங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியுள்ளனர். மேலும் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டிற்கு இடையேயான வர்த்தகப் பாதையும் முடக்கியுள்ளனர். இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டங்களை கட்டுப்படுத்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி இருக்க 'கட் சாட்' என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர், டுவிட்டரில் இந்திய பிரதமர் மோடி அவர்களிடம் ஒரு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: இந்த சர்வாதிகாரத்தில் இருந்து தப்பிக்க நாங்கள் கனடாவில் இருந்து வெளியேற இருக்கிறோம். இந்தியாவில் இடம் இருக்குமா எங்களுக்கு? என்று நேரடியாக மோடியிடம் கேட்டுள்ளார்.
இப்பதிவு சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
